Friday, 13 January 2012

புதிய புத்தங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2012 

எதிர் வெளியீடு

---------------------------------------------------------------------------------
ஆனி ஃபிராங்க்  டைரிக் குறிப்புகள்
ஓர் இளம் பெண்ணின் டைரிக் குறிப்புகள்

Add caption
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச் சிறுமி ஆனி ஃபிராங்க் , தனது 13, 14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். ஆனி ஃபிராங்க் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு - உலகையே குலுக்கிய புத்தகம்.  நாஜிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப் போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.  70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல் முறையாக தமிழில்.
Small is Beautiful

சிறியதே அழகு

இ.எப்.ஷூமாஸர்

தமிழில் : எம். யூசுப் ராஜா

உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாக டைம் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.


இரண்டாம் உலகப் போருக்குப் பின் வெளிவந்த சிறந்த பொருளாதார நிபுணர்களிடம் செல்வாக்கு செலுத்திய 100 நூல்களில் ஒன்றென டைம்ஸ் பத்திரிகையால் கொண்டாடப்பட்ட, ஐரோப்பாவின் மிகச்சிறந்த விருதுகளில் ஒன்றான Prix européen de l'essai Charles Veillon விருதை வென்ற ஆங்கில பொருளாதார நிபுணர்  இ.எப்.ஷூமாஸரின் சிந்தனையைத் தூண்டக் கூடிய நூல்.

மனிதனுக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவனது குறைபாடுகள் என்ன? அவற்றைச் சரி செய்ய வேண்டியதன் தேவை என்ன?  அவற்றை எப்படிச் செய்வது? முழு உலகிற்குமான நற்பலன் கிடைக்க எந்த வகையான தொழிற் செயல்பாடுகள் சரியானவை?  "அளவில் சிறிய மனிதனுக்கு சிறியவைகளே அழகானவை" 'உள்ளதே போதும்' என்ற மனநிலை எவ்வளவு நன்மையானது? தனி உடமைத்துவம் மனித இனத்தை எப்படிச் சுரண்டிச் சீரழிக்கிறது? அனைத்தும் பொதுவாவதால் விளையும் நன்மைகள் மனித குலத்தை எந்த அளவுக்கு வாழ்விக்கும்? எல்லாவற்றுக்கும் விடைதேடி அலசி ஆராய்கிறார்  பேரா  இ.எப். ஷீமாஸர்

Serious Men : Manu Joseph

பொறுப்புமிக்க மனிதர்கள்

மனு ஜோசப்

தமிழில் க.பூர்ணசந்திரன்

மனு ஜோசப் 2010இல் உச்சத்திலிருக்கும் நாவலாசிரியர்களில் ஒருவர்  - தி டெய்லி டெலிகிராஃப்.


இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் எழுதப்பட்ட ஒரு  நாவல், தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது.
-டெஹல்கா.

ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமான உருவங்களாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தானே இருக்கிறோம்
-பிஸினஸ் ஸ்டாண்டர்ட்

வெஞ்சினமும் காதலும்
-தி நேஷனல்

விசித்திரமாகத் திரித்தமைக்கப்பட்டது
-டெக்கான் ஹெரால்டு
1 comment: